பிரபலங்களுக்கும் இந்த நிலமையா? தக்காளி விலையால் கவலைபடும் பாலிவுட் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுக்கவே தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. இதனால் பாமர மக்கள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வரும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தக்காளியின் விலை கூடியிருப்பதால் தானும் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்து, குறைவாக பயன்படுத்தி வருவதாகக் கூறியிருக்கும் தகவல் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
பாலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வந்தவர் நடிகர் சுனில் ஷெட்டி. தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கும் இவர் தொழில் நிறுவனங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்திருக்கும் நடிகர் சுனில் ஷெட்டி மும்பையில் பல இடங்களில் உணவகங்களை நடத்தி வருகிறார்.
அதிலும் இவருடைய மிதக்கும் உணவகம் ‘மிஸ்சீஃப்‘ மற்றும் இத்தாலி உணவகம் போன்றவை வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்நிலையில் ‘என் மனைவி மனா ஓரிரு நாட்களுக்கு மட்டும் தேவையான காய்கறிகளை வாங்குவார். நாங்கள் புதிய விளைச்சலை சாப்பிடுவதையே விரும்புகிறோம் என்பதால் தேவைப்படும்போது வாங்கிக் கொள்வோம். தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் அதன் தாக்கம் எனது சமையலறையையும் பாதித்துள்ளது. இப்போதெல்லாம் தக்காளி சாப்பிடுவது குறைந்துள்ளது. நான் சூப்பர் ஸ்டார் என்பதால் இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது என்று மக்கள் நினைக்கலாம். ஆனால் இது உண்மையல்ல, இதுபோன்ற பிரச்சனைகளையும் நாங்கள் சமாளிக்க வேண்டும்.
தக்காளியின் விலை உயர்வால் சுவையிலும் தரத்திலும் மக்கள் சமரசம் செய்துகொள்ள வேண்டியுள்ளது. நானும் அதை செய்து வருகிறேன். மேலும் நான் காய்கறிகளை வாங்கும்போது பெரும்பாலும் செயலிகளில் மட்டுமே வாங்குகிறேன் என்று கூறியுள்ள நடிகர் சுனில் ஷெட்டி உணவகங்களுக்காக காய்கறிகளை பேரம் பேசி வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாமர மக்கள் மட்டுமே தக்காளியின் விலை குறித்து அதிர்ச்சி தெரிவித்து வந்த நிலையில் பாலிவுட் பிரபல நடிகர் ஒருவர் தக்காளியின் விலை குறித்து பேசியிருப்பது இணையத்தில் கவனம் பெற்றிருக்கிறது.
இந்தியாவில் காலநிலை காரணமாக வருடம்தோறும் ஜுன், ஜுலை மாதங்களில் பொதுவாக தக்காளியின் விலை கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த வருடம் கடந்த சில வருடங்களைவிட மேலும் கூடுதலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கடந்த சில மாதங்களாக இயல்பான அளவைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததுதான் என்று சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் வடஇந்தியா முழுக்கவே தற்போது கனமழை பெய்துவருகிறது.
இதனால் வழக்கத்திற்கு மாறாக தக்காளியின் விலை கூடுதலாகி பாமர மக்கள் குறைந்த அளவிற்கு பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இனனும் ஒருசிலர் தக்காளி பயன்படுத்துவதையே மறந்தும் போய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தக்காளியின் விலை கூடியிருப்பதால் எனது சமையலறையும் பாதிக்கப்பட்டு உள்ளது என்று பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி கூறியிருக்கும் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments