'சுந்தரி' சீரியல் நடிகையின் கணவர் இந்த இளைஞரா? வைரல் புகைப்படம்!
- IndiaGlitz, [Wednesday,March 31 2021]
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் பிரபலமடைந்து அதன்பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கத் தொடங்கியவர் கேப்ரில்லா. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சிகளில் அறிமுகமான கேப்ரில்லா, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சுந்தரி’ என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்புக்கு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகை கேப்ரில்லா ஏற்கனவே நயன்தாரா நடித்த ’ஐரா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீரியல் நடிகை கேப்ரில்லா தனது நீண்ட நாள் காதலரான ஆகாஷ் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கேப்ரில்லாவின் கணவர் இந்த இளைஞரா? என பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.