கணவர் மீது மீண்டும் புகாரளித்த 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதா தனது கணவர் மீது புகார் அளித்தார் என்பதும் அதன் பின்னர் காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர் என்பதும் செய்திகள் வெளியானதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ராதா புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா காவல்துறை இணை கமிஷனரை சந்தித்து தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் 14ந் தேதி எனது கணவரும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டருமான வசந்தராஜா மீது விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தேன். இந்த புகார் மீது விசாரிக்க போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாரதி என்னை செல்போனில் அழைத்து போலீஸ் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். இதனால் என்னுடன் காரில் வா என்று அழைத்து சென்று எனது கணவரையும் அழைத்து வந்து சமாதனமாக போகவும். புகாரை திரும்ப பெற்று நல்லபடியாக வாழுங்கள் என்று சப்- இன்ஸ்பெக்டர் பாரதி வற்புறுத்தினார்.
கணவரும் நல்லபடியாகச் சேர்ந்து வாழ்வதாக எழுதி கொடுத்தார். இந்த நிலையில் தொடர்ந்து வசந்தராஜா எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் பாரதி, இளம்பருதி ஆகியோர் எனது ஆட்கள்தான். நீ என்ன புகார் கொடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. போலீசில் எழுதி தந்ததை எல்லாம் அழித்துவிட்டேன் என வசந்தராஜா கூறினார்.
இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கேட்ட போது வசந்தராஜா எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதம் அதில் இல்லை எனவும், வசந்தராஜாவுக்கு ஆதரவாகவும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் இளம்பருதி, பாரதி ஆகியோர் மீதும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த வசந்தராஜா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நடிகை ராதா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments