சச்சின் கேள்விக்கு 'தோனி' பாணியில் பதில் கூறிய சுந்தர் பிச்சை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தபோது அந்த போட்டியை வர்ணனை செய்து வந்த சச்சின் தெண்டுல்கர், இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை வந்திருக்கின்றார் என்பதை அறிந்து அவரே சுந்தர் பிச்சையை அவர் இருக்கும் இடத்திற்கு சென்று சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். இதுகுறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த சச்சின், 'எப்படி' என்ற கேள்வியை சுந்தர் பிச்சையை நோக்கி எழுப்பியிருந்தார். அதற்கு சுந்தர் பிச்சை, 'வழக்கமாக தோனி சொல்லும் வார்த்தையை தான் இதற்கு சொல்ல வேண்டும். பஹூத் பாதியா ('மிகவும் சிறப்பு') என்று கூறிய சுந்தர் பிச்சை அதன்பின்னர் 'உங்களுடன் இணைந்து போட்டியை கண்டு ரசித்தது பெரும் மகிழ்ச்சி என்றும், மீண்டும் உங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கின்றேன்' என்றும் பதிலளித்துள்ளார்.
சச்சினின் இந்த டுவீட்டுக்கும், சுந்தர் பிச்சையின் பதிலுக்கும் ஏராளமான லைக்ஸ்களும் ரீடுவீட்டுகளும் குவிந்து வருகின்றது
As Mahi bhai would say, "Bahut Badhiya"????Pleasure watching the game with you, brought back great memories, till next time ??
— Sundar Pichai (@sundarpichai) July 3, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments