சுந்தர் சி அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் அட்டகாசமான போஸ்டர் வெளியீடு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சுந்தர் சி இயக்கிய ’அரண்மனை 3’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நாயகர்களும், அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று நாயகிகளும் நடிக்கும் திரைப்படம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்த படத்தில் விஜய் டிவி பிரபலம் டிடி உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்தது என்பதும் இந்த படத்தை சுந்தர் சி - குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் தயாரித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’காபி வித் காதல்’ என்று அறிவிக்கப்பட்டதோடு, அட்டகாசமான போஸ்டரும் இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் இந்த படத்தில் நடித்த முக்கிய பிரபலங்கள் அனைவரும் உள்ளதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
It’s Sundar.C sir’s presentation of a feel good, happy movie ❤️ I’m sooo glad I get to be a small part of it.Hoping you all will love it ❤️#CoffeeWithKaadhal ☕❤️✨#ASundarCEntertainer ??
— DD Neelakandan (@DhivyaDharshini) June 6, 2022
A @thisisysr Musical! ??@khushsundar #AvniCinemax #BenzzMedia@JiivaOfficial @Actor_Jai pic.twitter.com/4kKA7iTB5w
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com