கைமாறுகிறதா 'சங்கமித்ரா': பிரமாண்டமாக தயாரிக்க திட்டம்!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 'சங்கமித்ரா’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு வந்தது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பதாக இருந்த நிலையில் இந்த படம் அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்காமல் தாமதமாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது 'சங்கமித்ரா’ படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்துள்ளதாக தெரிகிறது. ’பொன்னியின் செல்வன்’ உள்பட ஒருசில வரலாற்று திரைப்படங்கள் தற்போது வெற்றி பெற்று வரும் நிலையில் 'சங்கமித்ரா’ படத்தை தயாரிக்க லைகா முடிவு செய்துள்ளது.

ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டதாகவும், அவருக்கு பதில் நாயகியாக திஷா பதானி நடிக்கவிருபதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திஷா பதானி ஏற்கனவே சூர்யாவின் ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்ரமின் மிரட்டும் கெட்டப்.. பா ரஞ்சித் படத்தின் டைட்டில் டீசர்!

 விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய டீஸர்

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய டிஸ்னி+  ஹாட்ஸ்டாரின் அனிருத் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி 

சென்னையில் அக்டோபர் 21 அன்று நடைபெற்ற, பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்' மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சியில், அனிருத்தின்  சார்ட்பஸ்டர் பாடல்களை

'ஆர்.ஆர்.ஆர்' படம் பார்க்க ரூ.3,57,268 செலவு செய்த ஜூனியர் என்.டி.ஆர் மனைவி!

'ஆர்.ஆர்.ஆர்' படம் பார்க்க ஜூனியர் என்டிஆர் மனைவி ரூ.3,57,268 செலவு செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

'இப்படி ஒரு விஷயம் நம்ம கண்ணு முன்னாடி நடந்துகிட்டே இருக்குது: 'கலகத்தலைவன்' டீசர்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் 'கலகத்தலைவன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன்

ரசிகர்களுக்கு ஸ்டார் ஓட்டலில் விருந்து கொடுத்த கீர்த்தி சுரேஷ்: வைரல் வீடியோ!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்களுக்கு ஸ்டார் ஓட்டலில் விருந்து கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.