'காபி வித் காதல்' படத்தின் 'நாளைய பொழுது' பாடல்: மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘காபி வித் காதல்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது.
’நாளைய பொழுது’ என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பா விஜய்யின் பாடல் வரிகளில், யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை பாடிய மயக்கம் குரலுக்கு சொந்தக்காரர் யுவன்சங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் இசை ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.
ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, ரெடின் கிங்ஸ்லி, ரைசா வில்சன், திவ்யதர்ஷினி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை குஷ்புவின் அவ்னி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு செல்வபாரதி குமாரசாமி என்பவர் வசனம் எழுதியுள்ளார்.
Experience Music and Magic alike in the composition and voice of @thisisysr ??????#NaalayaPozhudhu from #CoffeeWithKadhal is OUT NOW!
— RIAZ K AHMED (@RIAZtheboss) August 24, 2022
▶️https://t.co/UBGukAGwGD
A #SundarCEntertainer
Lyrics: @pavijaypoet#SundarC @khushsundar #AvniCinemax #BenzzMedia @U1Records pic.twitter.com/32d179mIqW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com