close
Choose your channels

இங்க ஒரு சக்தி இருக்கு சாமி, அது ரொம்ப உக்கிரமா இருக்கு சாமி: 'அரண்மனை 3' டிரைலர்!

Thursday, September 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர்சி இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான ’அரண்மனை 3’ திரைப்படம் அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த ட்ரெய்லரில் இருந்து ’அரண்மனை’ மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு படங்களில் இருந்த த்ரில், சஸ்பென்ஸ் காட்சிகள் சற்றும் குறைவில்லாமல் ’அரண்மனை 3’ படத்திலும் உள்ளது என்பது தெரிய வருகிறது.

இந்த படத்தில் ஆர்யாவின் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள், சுந்தர் சி யின் சீரியஸ் காட்சிகள், ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய மூன்று நாயகிகளின் கிளாமர் காட்சிகள், விவேக் மற்றும் யோகி பாபு காமெடி காட்சிகள் ஆகியவை நிறைந்திருப்பதால் இந்த படம் ஒரு ஜனரஞ்சக பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சி.சத்யாவின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் அதேபோல் செந்தில்குமாரின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் அரண்மனை மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு படங்களை விட ’அரண்மனை 3’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment