இங்க ஒரு சக்தி இருக்கு சாமி, அது ரொம்ப உக்கிரமா இருக்கு சாமி: 'அரண்மனை 3' டிரைலர்!

  • IndiaGlitz, [Thursday,September 30 2021]

சுந்தர்சி இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான ’அரண்மனை 3’ திரைப்படம் அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த ட்ரெய்லரில் இருந்து ’அரண்மனை’ மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு படங்களில் இருந்த த்ரில், சஸ்பென்ஸ் காட்சிகள் சற்றும் குறைவில்லாமல் ’அரண்மனை 3’ படத்திலும் உள்ளது என்பது தெரிய வருகிறது.

இந்த படத்தில் ஆர்யாவின் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள், சுந்தர் சி யின் சீரியஸ் காட்சிகள், ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய மூன்று நாயகிகளின் கிளாமர் காட்சிகள், விவேக் மற்றும் யோகி பாபு காமெடி காட்சிகள் ஆகியவை நிறைந்திருப்பதால் இந்த படம் ஒரு ஜனரஞ்சக பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சி.சத்யாவின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் அதேபோல் செந்தில்குமாரின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் அரண்மனை மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு படங்களை விட ’அரண்மனை 3’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

Butterfly effect என்பது இதுதானா? 10,000 ஏக்கர் காட்டையே அழித்துவிட்ட இளம்பெண்!

கலிபோர்னியாவில் மலையேற்றத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரால் 10,000 ஆயிரம் ஏக்கர் காடு தீப்பிடித்து எரிந்திருக்கிறது.

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை: கடிதத்தில் எழுதியிருப்பது என்ன?

பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் தான் தங்கியிருந்த அபார்ட்மென்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜீ5 சேனலில் சமுத்திரகனி இயக்கி நடித்த படம் ரிலீஸ்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் 'விநோதய சித்தம்' என்ற திரைப்படம் ஜீ5 சேனலில் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து

ஏஆர் ரஹ்மான் பின்னணி இசை, அந்த அரபிக்கடலோரம்: ஷிவானியின் கிளாமர் வீடியோ!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் 'அந்த அரபிக்கடலோரம்' என்ற பாடலின் பின்னணி இசையில் ஷிவானி நாராயணன் பீச் கிளாமர் வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள