close
Choose your channels

சுந்தர் சியின் அரண்மனையை கைப்பற்றிய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்?

Wednesday, September 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த பிரபல இயக்குனர் இராம.நாராயணன் ஆரம்பித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வருகின்றது. தமிழகத்தில் இருக்கும் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக பேய்ப்படங்களை இந்த நிறுவனத்தை நம்பி நிச்சயமாக தயாரிக்கலாம்.

அனுஷ்காவின் 'அருந்ததி' படத்தில் இருந்து காஞ்சனா, நஞ்சுபுரம், குட்டிப்பிசாசு, அரண்மனை, பிசாசு, டிமாண்ட்டி காலனி, என தொடர்ந்து பேய்ப்படங்களை இந்த நிறுவனம் ரிலீஸ் செய்து வந்தது. மேலும் ராய்லட்சுமி நடித்த 'செளகார்பேட்டை', நயன்தாரா நடித்த 'மாயா' மற்றும் சிபிராஜ் நடித்து வரும் 'ஜாக்சன் துரை' ஆகிய படங்களின் ரிலீஸ் உரிமைகளையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கி வரும் மற்றொரு பேய்ப்படமான 'அரண்மனை 2' படத்தின் ரிலீஸ் உரிமையையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அரண்மனை முதல் பாகத்தை ரிலீஸ் செய்து பெரும் லாபத்தை இந்த நிறுவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, கோவை சரளா, மனோபாலா, நரேன்,சூரி, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள 'அரண்மனை 2' படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்து வருகிறார். குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இவ்வருட இறுதியில் இந்த படம் ரீலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment