சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான 'சங்கமித்ரா' திரைப்படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படவுள்ளது. இந்த மெகா பட்ஜெட் படத்தை இயக்கவுள்ள சுந்தர் சி இந்த படத்தின் ஹீரோவை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக உள்ளார். இந்த படத்தில் இளையதளபதி விஜய் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. விஜய்யும் சுந்தர் சியின் கதையில் மிகவும் இம்ப்ரஸ் ஆனார். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருட கால்ஷீட் இந்த படத்திற்காக தேவைப்படுவதை அறிந்த விஜய் பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோ கேரக்டருக்கு பிரபல தெலுங்கு நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த நல்ல செய்தி வெளியாகும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. ஹீரோ முடிவு செய்யப்பட்ட பின்னரே ஹீரோயின் தேடும் படலம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இதற்கே சுமார் நான்கு மாத காலம் ஆகும் என்றும் அதன் பின்னரே படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான், சாபுசிரில், கமலக்கண்ணன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments