இறுதிக்கட்டத்தில் சுந்தர் சியின் அடுத்த படம்
- IndiaGlitz, [Thursday,March 17 2016]
சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'அரண்மனை 2' படத்தையடுத்து அவர் நடித்து வந்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் முடிந்துவிட்டதாகவும், தற்போது இந்த படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'வெள்ளிமூங்கா' என்ற படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சுந்தர் சி முக்கிய வேடத்திலும் அவருக்கு ஜோடியாக 'அரண்மனை 2' நாயகிகளில் ஒருவரான பூனம் பாஜ்வாவும் நடித்து வருன்றனர். சுந்தரி சியின் உதவியாளர் வெங்கட் இயக்கி வரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் சதீஷ் மற்றும் கிரண் ரத்தோட் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் மட்டுமே பாக்கி இருப்பதாகவும், அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கப்படும் என படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. 'வெள்ளிமூங்கா' படத்தில் பிஜூமேனன் நடித்த கேரக்டரில்தான் சுந்தர் சி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.