'மாநகரம்' படத்தின் மாஸ் ஓப்பனிங் விபரங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2015ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மாயா' படத்தை தயாரித்த பொட்டன்ஷியன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த படமான 'மாநகரம்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக இணையதள பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் இந்த படம் பெரிய ஸ்டார்கள் இல்லாமலேயே மாஸ் ஓப்பனிங் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் கடந்த வார இறுதியில் இந்த படம் 12 திரையரங்குகளில் 84 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.17,82,340 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து இன்று முதல் ஒருசில திரையரங்குகளில் பெரிய ஸ்க்ரீனுக்கு மாற்றப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments