பசியில உள்ள மிருகத்துக்கு வேட்டை தெரியணும்ன்னு அவசியம் இல்லை: 'மைக்கேல்' டீசர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி நடிப்பில் ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மைக்கேல்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் சந்திப் கிஷான் மற்றும் விஜய் சேதுபதியின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்று உள்ளது என்பதால் இந்த படம் ஆக்சன் பிரியர்களுக்கு ஒரு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தீப் கிஷான், விஜய் சேதுபதி, கௌதம்மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஞ்சித் ஜெயகொடி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் உருவாகி இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் தமிழ் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதே போல் மற்ற மொழி டீசர்களை மற்ற மொழி பிரபல நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Wishing @jeranjit @Dir_Lokesh @sundeepkishan all the very best for Michael.
— Dhanush (@dhanushkraja) October 20, 2022
Here’s the #MichaelTeaser :https://t.co/Q5ZpKxh9Cv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments