ஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்றும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் தள்ளிவைப்பு என்றும், அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் தடை என்றும், உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள் என்றும் பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து என்றும், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#TamilNadu Government imposes Night curfew between 10 pm and 4 am with effect from April 20; also announces complete lockdown on Sundays across the State in the fight against the spread of #COVID19. (1/3) pic.twitter.com/0VKFEAVA4W
— TNCoronaUpdates (@Covid19TNUpdate) April 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com