'சுந்தரி' சீரியல் நடிகைக்கு குருவாயூரில் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

சன் டிவியில் ஒளிபரப்பான ’சுந்தரி’ சீரியலில் நடித்த நடிகைக்கு குருவாயூரில் நேற்று திருமணம் நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

’சுந்தரி’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீகோபிகா. இவர் ’சுந்தரி’ இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில், ’அன்பே வா’ சீரியலில் கண்மணி கேரக்டரில் ஸ்ரீகோபிகா நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது குடும்பத்தினர் ஏற்பாடு செய்த வருண் தேவ் என்பவரை நேற்று குருவாயூரில் ஸ்ரீகோபிகா திருமணம் செய்து கொண்டார். கோபிகா-வருண் தேவ் திருமணத்தில் ’சுந்தரி’ தொடரில் நடித்த பலர் பங்கேற்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீ கோபிகா திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.