சீரியல் முடிந்ததும் கர்ப்பமான 'சுந்தரி' நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,November 19 2024]

சன் டிவியில் ஒளிபரப்பான ‘சுந்தரி’ சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் முடிவடைவதாக கூறப்படும் நிலையில், அந்த தொடரில் நடிக்கும் முக்கிய நடிகை ஒருவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. டிக் டாக் வீடியோ மூலம் மேலும் பிரபலமான நிலையில், இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. நயன்தாராவின் ஐரா, ராகவா லாரன்ஸின் ’காஞ்சனா 3’, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’கபாலி’ உள்பட சில படங்களில் சிறு கேரக்டர்களில் நடித்தார்.

இந்த நிலையில், சுந்தரி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் கிடைத்த கேப்ரில்லாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் முடிவடைகிறது என்றும், சமீபத்தில் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை கேப்ரில்லா கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி வெளியிட்டு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து, ரச்சிதா மகாலட்சுமி, சைத்ரா ரெட்டி உள்பட பல சின்னத்திரை நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.