கூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்!
- IndiaGlitz, [Saturday,June 12 2021]
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் டெக் நிறுவனங்களில் பணியாற்றி வரும் சிஇஓக்களின் சம்பளப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. அதில் ஆல்பாபெட் நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கும் செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கடந்த 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கரக்பூரில் ஐஐடியில் பொறியியல் படிப்பையும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டமும் பெற்றவர். பின்பு வார்ட்டன் எம்பிஏ பள்ளியில் மேலாண்மை படிப்பையும் முடித்துள்ளார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பின்பு கடந்த 2014 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து அதன் சிஇஓவாக பணியாற்றி வருகிறார். இதில் 2015 – 2020 ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்கு அவருடைய சம்பளமாக 80 ஆயிரம் கோடி பெற்றுள்ளார் என்றும் இந்தத் தொகை பங்குகள் மற்றும் பணமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவரைத் தவிர ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஒ மார்க் Zuckerberg இந்திய மதிப்பில் 4.17 லட்சம் கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார் என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது. இந்தப் பணம் கடந்த 2012 – 2020 ஆம் ஆண்டுக்கானது என்றும் பங்குகள் மற்றும் பணமாக இத்தொகை அவருக்கு வழஙகப்பட்டதாகவும் கூறப்படுகிறது.