கூகுள் சுந்தர் பிச்சையின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? மலைக்க வைக்கும் தகவல்!

  • IndiaGlitz, [Monday,July 10 2023]

கடந்த ஜனவரியில் கூகுள் நிறுவனத்தில் இருந்து 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்பட்டு வரும் சுந்தர் பிச்சையின் சம்பளத்தை குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். அந்தத் தகவல் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சுந்தர் பிச்சையின் வருமானம் மற்றும் அவருடைய சொத்துமதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பேசப்பட்டு வருகின்றன.

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சைக்கு ஆண்டுதோறும் அடிப்படை சம்பளமாக 2 மில்லியன் டாலர் மற்றும் பாதுகாப்புக்காக 5 மில்லியன் டாலர் சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஆனால் மூன்று வருடத்திற்கு ஒருமுறை அவருக்கு நிறுவனத்தின் பங்குகள் பரிசாக வழங்கப்படுகின்றன. அந்த வகையில் அவருடைய சொத்துமதிப்பு 2023 ஏப்ரல் மாதத்தின்படி 1.13 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 10,810 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சைக்கு 226 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ரூ.1,846 கோடி சம்பளமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 218 டாலர்கள் அவருக்கு நிறுவனத்தின் பங்குகளாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு முன்பு 2020 இல் 7.4 மில்லியன் டாலரும் 2021 இல் 6 மில்லியன் டாலரும் சம்பளமாக கிடைத்திருக்கிறது.

ஆனால் கடந்த 2019 இல் 281 மில்லியன் டாலர் இதில் நிறுவனத்தின் பங்குகளும் அடங்கும்.

அந்த அடிப்படையில் 2023 வரை சுந்தர்பிச்சையின் சொத்து மதிப்பு 1310 மில்லியன் டாலர் , 1.31 பில்லியன் இந்திய மதிப்பில் 10,810 கோடி எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது.

மதுரையில் 1972 ஜுன் 10 இல் மின்பொறியாளரான ரகுநாத பிச்சைக்கும் ஸ்டெனோகிராஃபர் லட்சுமி பிச்சைக்கும் மகனாக பிறந்தவர். படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டவரான இவர் ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியியல் பட்டம் பெற்று பின்பு அமெரிக்கா ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் படிப்பையும் அடுத்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலுள்ள வார்டன் பள்ளியில் எம்பிஏ படிப்பையும் முடித்துள்ளார்.

தொடர்ந்து Mckinsey நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் துவங்கிய அவர் முதலில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் மேலாண்மை மற்றும் தயாரிப்பு மோலாண்மை துறையில் பணியாற்றி இருக்கிறார்.

ஆனால் 2004 இல் கூகுளின் தயாரிப்பு மேலாண்மை மற்றும் மேம்பாட்டின் தலைவராக பொறுப்பு ஏற்றிருக்கிறார். இதையடுத்து படிப்படியாக வளர்ந்துவந்த அவர் 2015 – கூகுள் நிறுவனத்தின் சிஇஓஆக பதவியேற்றார். இதனால் உலகின் முதன்மையான சர்ச் என்ஜினான கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாளர்களுள் ஒருவராக மாறினார்.

குரோம், குரோம் ஓஎஸ், கூகுள் டிரைவ், ஜிமெயில் போன்ற கிளையன்ட் மென்பொருள் தயாரிப்பு மேலாண்மையில் பல்வேறு புதிய முயற்சிகளைச் செய்த இவர் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டிற்கும் கடந்த 2019 இல் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். அந்த அடிப்படையில் கூகுள் மற்றும் ஆல்பாபெட் இரண்டு நிறுவனங்களையும் தற்போது சுந்தர் பிச்சையே நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் சுந்தர் பிச்சையின் பங்குகள், முதலீடுகள், சம்பளம் அனைத்தும் சேர்த்து 2023இல் மொத்த நிகர மதிப்பு 1310 மில்லியன் 1.31 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. இந்திய மதிப்பில் இது 10,810 கோடி. கூகுள் நிறுவனத்தின் பங்குகளைத் தவிர இவருக்கு கூகுளின் இணை நிறுவனமான லாரி பேஜ், செர்ஜி பிரின் ஆகியவற்றிலும் சொந்தமான பங்குகள் இருக்கின்றன.

ஐஐடி காரக்பூரில் தன்னுடைய படித்த அஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது காவ்யா, கிரண் பிச்சை என்று இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

சுந்தர் பிச்சை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா அடுத்த லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ் பகுதியிலுள்ள சாண்டா கிளாரா கவுண்டி மாளிகை என்னும் பிரம்மாண்ட வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மதிப்பு 40 மில்லியன் எனக் கூறப்படும் நிலையில் 4,000 சதுர அடி பரப்பளவு கொண்ட 31.17 ஏக்கரில் இவர் வசித்துவரும் குறிப்பிடத்தக்கது.