close
Choose your channels

இந்த டீமை வச்சு ஈ கூட ஓட்ட முடியாது.. எங்கயிருந்து பேய் ஓட்றது? 'அரண்மனை 4' டிரைலர்..!

Saturday, March 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ படத்தின் நான்காம் பாகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமன்னா மற்றும் சந்தோஷ் பிரதாப் தம்பதிகளாக இருக்கும் நிலையில் இருவரும் மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். இதனை அடுத்து தமன்னாவின் சகோதரரான சுந்தர் சி தனது தங்கையின் மரணம் குறித்து விசாரிக்க வரும்போது பல உண்மைகள் தெரிய வருகிறது.

இதனை அடுத்து அவர் கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கிறாரா? அதில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது? அந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது என்பது சற்றுமுன் வெளியாகி உள்ள இரண்டு நிமிட டீசரிலிருந்து ட்ரெய்லரிலிருந்து.

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, ஆகியோர்களின் அட்டகாசமான நடிப்பு, யோகி பாபு விடிவி கணேஷ் காமெடி, ஹிப் ஹாப் தமிழா ஆதியின் சூப்பரான பின்னணி இசை மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை அட்டகாசமாக இருப்பதை எடுத்து இந்த படம் சுந்தர் சியின் மற்ற படங்களைப் போல் ஒரு ஜனரஞ்சக கமர்ஷியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் ’அரண்மனை’ படத்தின் மற்ற பாகங்கள் போலவே இந்த படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்று இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment