இந்த டீமை வச்சு ஈ கூட ஓட்ட முடியாது.. எங்கயிருந்து பேய் ஓட்றது? 'அரண்மனை 4' டிரைலர்..!

  • IndiaGlitz, [Saturday,March 30 2024]

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ படத்தின் நான்காம் பாகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமன்னா மற்றும் சந்தோஷ் பிரதாப் தம்பதிகளாக இருக்கும் நிலையில் இருவரும் மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். இதனை அடுத்து தமன்னாவின் சகோதரரான சுந்தர் சி தனது தங்கையின் மரணம் குறித்து விசாரிக்க வரும்போது பல உண்மைகள் தெரிய வருகிறது.

இதனை அடுத்து அவர் கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கிறாரா? அதில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது? அந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது என்பது சற்றுமுன் வெளியாகி உள்ள இரண்டு நிமிட டீசரிலிருந்து ட்ரெய்லரிலிருந்து.

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, ஆகியோர்களின் அட்டகாசமான நடிப்பு, யோகி பாபு விடிவி கணேஷ் காமெடி, ஹிப் ஹாப் தமிழா ஆதியின் சூப்பரான பின்னணி இசை மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை அட்டகாசமாக இருப்பதை எடுத்து இந்த படம் சுந்தர் சியின் மற்ற படங்களைப் போல் ஒரு ஜனரஞ்சக கமர்ஷியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் ’அரண்மனை’ படத்தின் மற்ற பாகங்கள் போலவே இந்த படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்று இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிய வருகிறது.

More News

திருச்செந்தூர் முருகனின் அற்புத சக்திகள்: கர்ம வினையை வெல்லும் வழி!

திருச்செந்தூர் முருகன் கோயில், ஆன்மீக தேடல் உள்ளோர் கட்டாயம் சென்று வர வேண்டிய இடம். தலைவிதியை மாற்றும் ஆற்றல் பற்றி விஜய் குமார் விவரிக்கிறார்.

நான் 'அரண்மனை 4' படத்தில் நடிக்க விஜய் சேதுபதி தான் காரணம்: சுந்தர் சி

இதுவரை வெளியான 'அரண்மனை' படத்தின் மூன்று பாகங்களிலும் இரண்டு முக்கிய நடிகர்கள் நடித்த நிலையில் 'அரண்மனை' படத்தை நான்காம் பாகத்தில் ஒரே ஒரு ஹீரோ மட்டும் தான் இருந்தார்

இளவயது மரணங்களின் வேதனை பெரிது.. டேனியல் பாலாஜி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய கமல்..!

நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு திடீரென மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் அவரது குடும்பத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .  

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? முதல் படம் போல் இருக்குமா?

நடிகர் அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அருண் விஜய் நடிக்க இருக்கும்

இன்று தேய்பிறை பஞ்சமி 2024: வாராகி வழிபாடு - விரிவான வழிகாட்டி மற்றும் பலன்கள்

வாராகி அம்மன், சப்த கன்னியர்களில் ஒருவர். பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்ட வாராகி அம்மன், துன்பங்களை அழித்து, வளங்களை வழங்கும் தெய்வமாக வணங்கப்படுகிறார்.