ஓடிடியில் சுந்தர் சியின் 'அரண்மனை 4' .. எந்த ஓடிடியில்? எந்த தேதி? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 4’ திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் என்பதும் இந்த படம் மே மாதம் 3ஆம் தேதி வெளியான நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.
30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்த நிலையில் தற்போது திரையரங்குகளில் சூப்பர் வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’அரண்மனை 4’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கி இருப்பதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட செய்திகள் வந்த நிலையில், தற்போது ஹாட்ஸ்டார் தமிழ் தனது சமூக வலைத்தளத்தில் ’அரண்மனை 4’ திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஒரு செம பேமிலி என்டர்டெயினர் என்ற கேப்ஷனுடன் புதிய போஸ்டர் உடன் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் இந்த படத்தை ஓடிடியில் பார்க்கவும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, ராமச்சந்திர ராஜு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் கே எஸ் ரவிக்குமார், குஷ்பு மற்றும் சிம்ரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவான இந்த படம் திரையரங்கை போலவே ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Oru semma Family entertainer!
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) June 5, 2024
Aranmanai 4 Streaming From June 21 On Disney +Hotstar#Aranmanai4 #StreamingFromJune21 #DisneyplusHotstar #Disneyplushotstartamil pic.twitter.com/9rz8wBBqNx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments