அவங்க ஒரு டேமேஜ் ஹீரோயின்: 'காபி வித் காதல்' நடிகையை கேலி செய்த சுந்தர் சி

சுந்தர் சி இயக்கிய 'காபி வித் காதல்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சுந்தர் சி, குஷ்பு உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்

இந்த விழாவில் சுந்தர் சி பேசிய போது ’இந்த படத்தில் நான்கு நாயகிகள் குறித்து பேசினார். அதில் குறிப்பாக மாளவிகா ஷர்மா குறித்து பேசியபோது, ‘அவர் ஒரு டேமேஜ் ஹீரோயின் என்று கூறினார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அவ்வப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதனால் தான் அவரை டேமேஜ் ஹீரோயின் என்று கூறுவதாக கூறினார்

பொதுவாக ஆக்சன் படம் என்றால் ஹீரோவுக்கு தான் காயம் ஏற்படும் என்றும், ஆனால் இது ஒரு ரொமாண்டிக் படம் என்பதால் மாளவிகாவுக்கு அதிகம் காயம் ஏற்பட்டது என்றும் தெரிவித்தார். ஒருமுறை படப்பிடிப்பின்போது அவர் கண்ணில் அடிபட்டு விட்டது என்றும் இன்னொரு நாள் கையில் அடிபட்டுவிட்டது என்றும் இன்னொரு நாள் கால் முட்டி வீங்கிவிட்டது என்றும் இதனால் அவருடைய காட்சிகளை கஷ்டப்பட்டு படமாக்கினோம் என்று கூறினார். மேலும் அவர் ஒரு வக்கீல் என்றும் அவர் பயங்கரமாக சட்டம் பேசுவார் என்று எதிர்பார்த்தோம், ஆனால் மிகவும் சாதுவாக இருந்தார் என்றும் சுந்தர் சி அவரை கேலியுடன் கூறினார். அதேபோல் அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, டிடி மற்றும் ரைசா விலசன் ஆகியோர் குறித்தும் அவர் இந்த விழாவில் பேசினார்

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், ஃபென்னி ஆலிவர் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

More News

மீண்டும் கார்த்தியுடன் இணையும் பிரபல நடிகை .. இயக்குனர் இவர் தான்!

நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த நிலையில் தற்போது மீண்டும் கார்த்தி - ராஷ்மிகா மந்தனா ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக

முதல் பாதியின் இயக்குனர் வெற்றிமாறன், 2ஆம் பாதியின் இயக்குனர் நான்: பிரபல இயக்குனரின் திட்டம்

ஒரு திரைப்படத்தின் முதல் பாதியின் இயக்குனர் வெற்றிமாறன் என்றும், இரண்டாம் பாதியில் இயக்குனர் தான் என்றும் பிரபல இயக்குனர் ஒருவர் திட்டமிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

'வெந்து தணிந்தது காடு' நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. பிரபல நடிகருடன் அடுத்த படம்!

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.

முன்பதிவில் மட்டுமே கோடிகளை குவித்த 'பொன்னியின் செல்வன்': வசூல் சாதனை செய்யுமா?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நேற்று இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த புதுமண தம்பதிகளா? சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்து வரும் அக்டோபர் மாதம் 6வது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது