'அரண்மனை 5' உருவாக வேண்டும் என்றால் இது நடக்க வேண்டும்: சுந்தர் சி

  • IndiaGlitz, [Saturday,May 04 2024]

சுந்தர் சி இயக்கி நடித்த 'அரண்மனை 4’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்றும் கோடை விடுமுறையில் குடும்பத்துடன் பார்க்க ஒரு நல்ல கலகலப்பான படம் என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.

’அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்களும் திருப்திகரமான வசூலை கொடுத்த நிலையில் 'அரண்மனை 4’ படமும் நல்ல வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரை உலகை பொருத்தவரை ஒரு திரைப்படம் நான்காம் பாகம் வெளியாவது இதுதான் முதல் முறை என்ற நிலையில் சமீபத்தில் சுந்தர் சி அளித்த பேட்டியில் 'அரண்மனை 4’ படம் நன்றாக ஒர்க் அவுட் ஆனால் 'அரண்மனை 5’ டமும் உருவாக வாய்ப்பு இருப்பதாக சுந்தர் சி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் ’அரண்மனை’ படத்தின் பாகமும் தொடர்ச்சியான கதை அம்சம் கொண்டது கிடையாது என்றும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு கதை அம்சம், கேரக்டர்கள் வெவ்வேறாக இருக்கும் என்றும் டைட்டிலை மட்டும் தான் நாங்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளோம் என்றும் அந்த வகையில் 'அரண்மனை 4’ படமும் ஒரு தனித்துவமான கதை அம்சம் கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.

'அரண்மனை 4’ திரைப்படம் நன்றாக ஒர்க் அவுட் ஆனால் 'அரண்மனை 5’ திரைப்படம் உருவாகும் என்று சுந்தர் சி கூறி இருக்கும் நிலையில் 'அரண்மனை 4’ படத்தின் திருப்திகரமான வசூல் குறித்த தகவல்களை பார்க்கும்போது 'அரண்மனை 5’ நிச்சயம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ’சங்கமித்ரா’ என்ற படத்தை ஆரம்பித்துள்ள சுந்தர் சி அந்த படத்தை இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். அதுமட்டுமின்றி ’கலகலப்பு 3’ படமும் எடுக்கும் ஐடியாவில் சுந்தர் சி இருக்கும் நிலையில் எந்த படத்தை அடுத்ததாக இயக்குவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.