தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சுந்தர் சி: குஷ்பு வெளியிட்ட புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,April 16 2021]

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவின் கணவருமான சுந்தர் சி அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதனை அடுத்து மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் தனது கணவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்வதாகவும் குஷ்பு தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் சற்று முன் தனது கணவர் சுந்தர் சி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படத்தை குஷ்பு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தனி அறையில் சுந்தர்சி ஒரு நாற்காலியில் உட்கார்ந்து மொபைல் போனை பார்த்து கொண்டிருப்பது போன்றும் சில அடிகள் தூரத்தில் குஷ்பு உட்கார்ந்து கொண்டு அவரை பார்த்துக் கொண்டிருப்பதுமமான இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

இது மாதிரி தான் நாங்கள் சில நாட்களாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம் என்றும், இன்னும் மூன்று நாட்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் அதன் பின்னர்தான் அவர் அவருடைய தனிமைப்படுத்தப்பட்டு காலம் முடிவடைந்து வீட்டிற்குள் வருவார் என்று குஷ்பு அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.