சுந்தர் சி அடுத்த படத்தின் பூஜை: டைட்டில், நாயகி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,January 14 2022]

பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் ’அரண்மனை 3’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் இதனை அடுத்து தற்போது அவர் ‘தலைநகரம் 2’ உள்பட மூன்று படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுந்தர் சி நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு ’ஒன் 2 ஒன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருஞானம் என்பவர் இயக்கத்தில் உருவாகயிருக்கும் இந்தப் படத்தில் சுந்தர்சி ஜோடியாக ராகினி திரிவேதி என்பவர் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.