close
Choose your channels

முயற்சி செய்யாதவனுக்கு தோல்வி கூட கிடைக்காது: சுந்தர் சி அடுத்த படத்தின் டிரைலர்..!

Saturday, June 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா மற்றும் ராஷிகண்ணா நடிப்பில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சுந்தர் சி நடிப்பில் உருவான ’ஒன் டு ஒன்’ என்ற திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தர் சி ஹீரோவாகவும் பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்துள்ள இந்த படத்தை திருஞானம் இயக்கி உள்ளார். சித்தார்த் விபின் இசையில் உருவாகிய இந்த படத்தில் விஜய் வர்மன், நீத்து சந்திரா, ராகினி திவேதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் இரண்டு கேரக்டர்கள் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் இந்த படத்தின் கதை என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. இந்த படம் விரைவில் திரையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சில ஆவேசமான வசனங்கள் இதோ:

முயற்சி செய்யாதவனுக்கு தோல்வி கூட கிடைக்காது எனக்கு தோல்வியே கிடைத்தாலும் முயற்சி செய்யாமல் விட மாட்டேன்

அந்த ஆண்டவனே எப்போதும் நல்லவன் பக்கம் தாண்டா நிப்பாரு

ஒரு உசுரோட பசிக்கு இன்னொரு உசுர இரையா படச்சவண்டா உங்க கடவுள் அவன்கிட்ட இன்னுமாடா கருணைய எதிர்பார்க்கிறீங்க உன்னோட ஆக்சன் ரியாக்சன் கோபம் எல்லாம் என்னோட கண்ட்ரோல்ல இருக்கு நான் ஸ்ரீ நான் சிரிக்கணும் அழு நான் அழுவேன்

நான் யாருன்னா ஆசை பேராசை இரண்டும் கலந்த கலவை

உன்ன கண்ட துண்டமாக வெட்டி நீ சாகறதுக்கு முன்னாடி உன் ரெண்டு கண்ணையும் நோண்டி என் காலில் போட்டு மிதிக்கணும் டா

உன் கதையில நீ ஹீரோன்னா உனக்கு நான் தாண்டா வில்லன், வா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.