சுந்தர் சி உடன் ஒரே ஒரு தமிழ்ப்படம்.. கொடிய நோயால் உயிரிழந்த நடிகைக்கு அஞ்சலி..!

  • IndiaGlitz, [Tuesday,May 07 2024]

சுந்தர் சி உடன் ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்த நடிகை மலையாளத்தில் ஏராளமான படங்கள் நடித்துள்ள நிலையில் அவர் கொடூரமான நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தர் சி நடித்த ’இருட்டு’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் அடுத்தவர் நடிகை கனகலதா. அந்த ஒரு தமிழ் படத்தை தவிர அவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பதும் கடந்த சில மாதங்களாக அவர் பார்க்கின்சன் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் சிகிச்சை பெற பணம் இல்லாத நிலையில் கேரள திரைப்பட சங்கம் அவருக்கு உதவி செய்தது என்பதும் அதன் மூலம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நோய் முற்றிய நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 63.

கனகலதாவின் மறைவு மலையாளத் திரை உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுமார் 40 ஆண்டுக்கு மேலாக திரையுலகில் அவர் நடித்துள்ள நிலையில் அவரது மறைவு மலையாள திரையுலகிற்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

 

More News

படம் வெளியாகும் முன்பே முழு வீடியோ பாடலை வெளியிட்ட வேல்ஸ் நிறுவனம்.. என்ன படம்?

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் முழு வீடியோ பாடல் ஒன்று, படம் வெளியாகும் முன்பே இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த பாடலின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

மல்லாக்க படுத்துகிட்டு புக் படிக்கிற ஸ்டைலே தனி தான்.. மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை மாளவிகா மோகனன் விதவிதமான போஸ்களில் புத்தகம் படிக்கும் போட்டோஷூட்  புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான காமெடியான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

அதர்வா அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. நாயகி, இயக்குனர் பெயரும் அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் அதர்வா ஜோடியாக

ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் போகுமிடம் வெகு தூரமில்லை ஃபர்ஸ்ட் லுக் !!

விமல், கருணாஸ் நடிப்பில்  "போகுமிடம் வெகு தூரமில்லை" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பொண்டாட்டியிடம் அடி வாங்குபவரா வெங்கடேஷ் பட்.. வைரலாகும் ரொமான்ஸ் வீடியோ..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செஃப் வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் இருந்து விலகி சன் டிவியில் உருவாக இருக்கும் புதிய நிகழ்ச்சியான