எங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க: குஷ்புவை செல்லமாய் கண்டித்த டிடி!

எங்கள் டைரக்டர் சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார், அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று வீடியோ காலில் குஷ்புவிடம் டிடி செல்லமாக கோபித்துக் கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிரபல இயக்குநர் சுந்தர் சி தற்போது ஜெய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா, அம்ருதா ஐயர் மற்றும் ரைசா வில்சன் ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் டிடி நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 

இந்நிலையில் படப்பிடிப்பின் இடைவெளியின்போது வீடியோ காலில் தனது மனைவி குஷ்புவுடன் இயக்குனர் சுந்தர்சி பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த டிடி எங்கள் டைரக்டர் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார், அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று செல்லமாக கோபித்து கொண்டார். அப்போது குஷ்பு வெட்கத்துடன் ’நான்தான் அவரை டிரஸ் பண்ண முடியும்’ என்று கூற அதற்கு டிடி, ‘பாத்துக்கோங்க மக்களே, என்ன ஒரு கணவன் மனைவி. எல்லோரும் பாத்து கத்துக்கோங்க’ என்று கூறுகிறார்.

இந்த வீடியோ டிடியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியாகி இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.