சுந்தர் சியின் 'தலைநகரம் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு..! அதே நாளில் மேலும் 3 படங்கள் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Thursday,June 15 2023]

சுந்தர் சி நடித்த ‘தலைநகரம் 2’ என்ற படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தலைநகரம்’. இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

அஜித்தின் ‘முகவரி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை இயக்கத்தில் உருவான இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இந்த படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் செய்தவுடன் கூடிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதே ஜூன் 23ஆம் தேதி ’தண்டட்டி’, ‘அழகிய கண்ணே’ மற்றும் ’ரெஜினா’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது