close
Choose your channels

காலங்கள் மாறும் கனவெல்லாம் மாறும்: 'காபி வித் காதல்' யுவனின் மெலடி பாடல்

Friday, October 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’காபி வித் காதல்’ என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யும் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’காலங்கள் மாறும்’ என்று தொடங்கும் பாடல் வெளியாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த மெலடி பாடலை பா விஜய் எழுதியுள்ளார். இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.ர் இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, ரெடின் கிங்ஸ்லி, ரைசா வில்சன், திவ்யதர்ஷினி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை குஷ்புவின் அவ்னி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு செல்வபாரதி குமாரசாமி என்பவர் வசனம் எழுதியுள்ளார்.

சற்றுமுன் வெளியாகியுள்ள ‘காலங்கள் மாறும்’ பாடலின் முதல் சில வரிகள் இதோ:

காலங்கள் மாறும்
கனவெல்லாம் மாறும்
சொல்லாமல் இதயங்கள் இடம் மாறும்

நேற்றை போல் என்றும்
இன்றே இருக்காது
நாளைகள் நாளும் நிறம் மாறிடும்

சில காலம் சாரலும்
சில காலம் வெயிலும்
கடிகாரம் ஓட ஓட காலம் மாறுது..

மாற்றங்கள் ஒன்றுதான்
மாறாது வாழ்விலே
வண்ணங்கள் மாறி மாறி வானம் நீளுதே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment