சுந்தர் சியின் 'காபி வித் காதல்' படத்தின் 'தியாகி பாய்ஸ்' பாடல்: யுவனுடன் பாடிய பிரபல இசையமைப்பாளர்!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் குஷ்புவின் அவ்னி சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காபி வித் காதல்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற ’தியாகி பாய்ஸ்’ என்ற பாடல் வெளியாகி உள்ளது.

இந்த பாடலை யுவன் சங்கர் ரஜா கம்போஸ் செய்ய, யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகிய இருவரும் பாடியுள்ளனர். இந்த பாடலை பேரரசு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சுந்தர் சி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.