சுந்தர் சியின் 'அரண்மனை 4' படத்தின் சூப்பர் அப்டேட்..!

  • IndiaGlitz, [Thursday,April 13 2023]

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நான்காவது பாகம் உருவாகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் அவரே முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

மேலும் சுந்தர் சி ஜோடியாக ராஷி கண்ணா நடிப்பதாகவும், அவருடைய தங்கையாக பிரபல நடிகை தமன்னா நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முதல் ‘அரண்மனை 4’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொச்சியில் தொடங்கி இருப்பதாகவும், அதில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ’அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்கள் நல்ல வரவேற்பை பெற்றது போலவே இந்த நான்காவது பாகமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர், சி, தமன்னா, ராஷிகண்ணா, சித்தார்த், ஆண்ட்ரியா, கே பாக்யராஜ், மீனா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
 

More News

சொகுசு படகில் ஷாருக்கான் - நயன்தாரா பாடல் காட்சி.. வீடியோ கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி..!

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா சொகுசு படகில் பாடல் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

லோகேஷ், த்ரிஷா, அர்ச்சனா கல்பாதி.. தோனியின் சிக்சர்களை பார்க்க குவிந்த கோலிவுட் பிரபலங்கள்..!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்ப்பதற்கு கோலிவுட் பிரபலங்கள் பலர் வருகை தந்திருந்தனர்

'கண்ணை நம்பாதே' உள்பட இந்த ஓடிடி திரைப்படங்கள் என்னென்ன? 

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஓடிடி தளங்களிலும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த 'ஜகமே தந்திரம்' நடிகர்.. !

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயகக்த்தில் உருவான 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்த பிரபல

நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டி.. உதயநிதி ஸ்டாலின் செய்த மிகப்பெரிய உதவி..!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை காண 120 சிறுவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் சென்று