சுந்தர் சியின் 'அரண்மனை 3': ஃபர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் ரிலீஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சுந்தர் சி நடித்த இயக்கி வரும் ’அரண்மனை 3’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென சுந்தர் சி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தற்போது அவர் தனிமைப்படுத்தும் காலத்தில் உள்ளார் என்பதும், விரைவில் அவர் மீண்டும் ’அரண்மனை 3’ படத்தின் தொழில்நுட்ப பணியை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை ஆகிய இரண்டும் சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை சுந்தர்சி, ஆர்யா, ராஷி கண்ணா, யோகி பாபு, சாக்ஷி அகர்வால், குஷ்பூ, சம்பத்ராஜ், மனோபாலா உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்
’அரண்மனை 3’திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சுந்தர் சி, ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷிகண்ணா, சாக்சி அகர்வால், விவேக், யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Here’s the motion poster from #SundarCAranmanai3#அரண்மனை3
— Arya (@arya_offl) April 22, 2021
An #AvniCineMax Production ????@arya_offl @RaashiiKhanna_ #sundarc @iYogiBabu @manobalam @ssakshiagarwal @uksrr @CSathyaOfficial @FennyOliver @khushsundar @johnsoncinepro @kvMothi @decteamworks1 pic.twitter.com/UMHEFyJrGX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments