close
Choose your channels

சுந்தர் சி - வடிவேலு படத்தின் டைட்டில் இதுதான்: முதல்முறையாக ஒரு காமெடி HEIST கதை..!

Thursday, September 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

15 வருடங்களுக்கு பின்னர் சுந்தர் சி மற்றும் வடிவேலு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் இந்த படம் குறித்து சில விஷயங்களை சுந்தர் சி சமீபத்தில் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி - வடிவேலு காம்பினேஷன் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்திற்கு ’கேங்கர்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுந்தர் சி கூறியதாவது:

பொதுவாக தமிழில் HEIST படங்கள் அதிகம் வருவதில்லை, அப்படியே வந்தாலும் பெரிய நகரங்களில் உள்ள பெரிய வங்கியில் பெரிய அளவில் திட்டமிட்டு நடக்கும் கொள்ளை அடிக்கும் கதை அம்சம் கொண்ட படங்கள் தான் வந்துள்ளது. இந்த படம் அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது.

ஒரு வாத்தியார், ஒரு ஆட்டோ டிரைவர், ஒரு பார் ஓனர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகிய நான்கு சாதாரண மனிதர்கள் ஒன்று கூடி ஒரு சிறிய நகரத்தில் உள்ள வங்கியை கொள்ளையடிக்கின்றனர். அவ்வாறு கொள்ளை அடிக்கும் போது ஏற்படும் விளைவுகள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தில் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் வடிவேலு நடித்திருக்கிறார், இந்த கேரக்டரை ரசிகர்களால் மறக்கவே முடியாது, ஐந்து கெட்டப்புகளில் வடிவேலு இந்த படத்தில் தோன்றுகிறார், நிச்சயமாக ஒரு மிகப்பெரிய காமெடி காத்திருக்கிறது, நாங்கள் படமாக்கும் போதே சிரிப்பை அடக்கிவிட்டு படமாக்க பெரும் பாடுபட்டோம் என்றும் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் சுந்தர் சி, வடிவேல், கேத்தரின் தெரசா, ஹரிஷ் பேரடி, மைம் கோபி, மதுசூதன் ராவ், அருள்தாஸ், முனீஸ்காந்த், பக்ஸ், காளையன் என பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment