ஆர்யாவின் 'அரண்மனை 3' படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலின் வரிகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘அரண்மனை 3’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது அடுத்த பாடலான ’ரசவாச்சியே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.
சத்யா இசையில், சித் ஸ்ரீராம் குரலில், மோகன்ராஜா எழுதியிருக்கும் இந்தப் பாடல் வரிகள் இதோ:
பல்லவி
ரசவாச்சியே
ரசவாச்சியே
உன் பார்வையால போனேன் கூசியே
விழி சாய்ச்சியே
விழி சாய்ச்சியே
நீ பேசும் போது ஆவேன் தூசியே
பாவாட சட்டையில நான் பாத்த நேரம் எல்லாம்
பாலாட பால போல தழும்புவேன்டி
நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம்
நெஞ்சோரம் இன்னும் கூட நெனைக்குறேன்டி
----------------------------------------
ரசவாச்சியே விழி சாய்ச்சியே ரசவாச்சியே
………………………
சரணம்
ஆளான நேரத்தில்
வெட்கப்படும் உன் கண்ணு
அந்த நேரம் நீ போட்ட உன் வளையல் ஆளி சேர்த்தேன்
தெனம் காலாற உன்கூட
சேர்ந்து வர நெனப்பேனே
அப்போயெல்லாம் உன் நிழலில் என் நிழலை
தொட்டு பாப்பேன் …
ஒரு ரிப்பன் போல தான் சுத்தி கெடக்குறேன் உன் மேல நானே
நீ பாரு அது போதும் நான் வாழுவேன்
ரசவாச்சியே ரசவாச்சியே விழிசாய்ச்சியே
பாவாட சட்டையில நான் பாத்த நேரம் எல்லாம்
பாலாட பால போல தழும்புவேன்டி
நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம்
நெஞ்சோரம் இன்னும் கூட நெனைக்குறேன்டி
ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே
ரசவாச்சியே விழி சாய்ச்சியே
’அரண்மனை 3’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களை விட மூன்றாவது பாகம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட உள்ளதாகவும், பேய் படங்களை நகைச்சுவையோடு குடும்பத்துடன் காணும் வகையில் உருவாகி இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா ,மனோபாலா,சம்பத், சாக்ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout