சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும்

  • IndiaGlitz, [Monday,October 02 2023]

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் ஒன் 2 ஒன் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும், கீழும், கடும் ஆக்ரோஷத்துடன் சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இடம்பெற்றிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பெரும் ஆவலை தூண்டுகிறது. ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான கமர்ஷியல் விருந்துள்ளது என்பதை ஃபர்ஸ்ட் லுக் உறுதிப்படுத்துகிறது.

ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் இதுவரையிலும் ஏற்று நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார். அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் அட்டகாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தைத் தொடர்ந்து இயக்குனர் K.திருஞானம், விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சுந்தர்.C நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்திரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக இசையமைப்பாளர் சித்தார்த் விபின் அட்டகாசமான நான்கு பாடல்களை இசையமைத்துள்ளார். முன்னதாக இவரின் இசையில் பிரமித்து, புத்தம் புதிய ஐபோன் வழங்கி அவரைப் படக்குழு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

More News

'அயலான்' டீசர் எப்போது? சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில்

'தலைவர் 170' படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும்

முதல் நாள் முதல் பாடல்.. ரவீனாவை இடுப்பில் தூக்கி உட்கார வைத்த மணி..!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக தொடங்கிய நிலையில் அந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று முதல் நாளில் வேக்கப் பாடல்

'தளபதி 68' படத்தில் விஜய்க்கு இவ்வளவு சின்ன வயது கேரக்டரா? மாஸ் காட்சிகளுக்கு உத்தரவாதம்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் நாளை முதல் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

'தளபதி 68' படத்தில் 80களின் சூப்பர் ஹிட் பட ஹீரோ? ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 68' படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இந்த படத்தில் 80களின் சூப்பர் ஹிட் படங்களை