'அரண்மனை'யின் உரிமையாளர் யார்? சுந்தர் சி விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,January 12 2016]

கோலிவுட் இயக்குனர்களில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிகா இதுவரை 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'ஆம்பள', அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தனது விருப்பத்திற்குரிய நாயகி குறித்தும் 'அரண்மனை 2' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவருமான ஹன்சிகா குறித்து சமீபத்தில் சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

'அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய இரண்டு படங்களையும் ஹன்சிகா இல்லாமல் நினைத்து கூட பார்க்க முடியாது. சொல்லப்போனால் 'அரண்மனை'யின் உரிமையாளர்களில் ஒருவர் ஹன்சிகா. அரண்மனை வரிசையில் இன்னும் எத்தனை பாகங்கள் எடுக்கப்பட்டாலும் கண்டிப்பாக அதில் ஹன்சிகா இருப்பார் என்று கூறியுள்ளார்.

சுந்தர் சி முக்கிய வேடத்தில் நடித்து இயக்கியுள்ள 'அரண்மனை 2' திரைப்படம் வரும் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. ஹன்சிகாவை தவிர இந்த படத்தில் த்ரிஷா மற்றும் பூனம் பாஜ்வா ஆகிய இரு நாயகிகளும் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது