சுனைனாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? அவரே அளித்த பதில்!
- IndiaGlitz, [Thursday,December 26 2019]
தனுஷ், மேகாஆகாஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த சுனைனாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்ததே. அதேபோல் தற்போது வெளியாகியுள்ள ’சில்லுக்கருப்பட்டி’ என்ற படத்திலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்களிலும் தனது நடிப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்துள்ளதால் சுனைனா தற்போது உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்த நிலையில் தனது ரசிகர்களுடன் சமூக வலைதளப் பக்கத்தில் சுனைனா உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் ’உங்களுக்கு திருமணம் நடந்து விட்டதாக ஒரு வதந்தி உலாவி வருகிறது, அது உண்மையா? என கேட்டபோது ’இந்த வதந்தியை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய திருமணம் பலரது முன்னிலையில் பகிரங்கமாக தான் நடக்கும், ரகசியமாக நடக்காது. இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்
சுனைனா தற்போது ’ட்ரிப்’ மற்றும் ’எரியும் கண்ணாடி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது