அடுத்த தலைமுறை இளைஞர்களின் டிரெண்டுக்கு மாறிய சுனைனா
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் தற்போது தயாரிப்பாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதால் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்படும் படத்தின் விலையை தயாரிப்பாளர் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. அப்படியே நிர்ணயம் செய்தாலும், போதுமான நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில்லை. மேலும் ஆன்லைன் பைரஸி தொல்லை, பெய்டு டுவிட்டர்களின் முதல் நாள் விமர்சனம் போன்ற பல பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சந்திப்பதால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து காணாமல் போய்விட்டனர்
இந்த நிலையில் டிஜிட்டல் திரைப்படம் என்னும் வெப்சீரியல் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. ஒரு திரைப்படத்திற்கு ஏற்படும் மேற்கண்ட எந்த பிரச்சனையும் இந்த வெப்சீரியலுக்கு இல்லை என்பதால் வருங்காலத்தில் வெப்சீரியல்கள் ஆதிக்கம் கோலிவுட்டில் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மாதவன் நடிப்பில் 'ப்ரீத் என்ற வெப்சீரியலும், பாபிசிம்ஹா, பார்வதி நடிப்பில் ஒரு வெப்சீரியலும் உருவாகி வரும் நிலையில் தற்போது சுனைனா முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு வெப்சீர்யல் தயாராகவுள்ளது. 'திருதிரு துறுதுறு' படத்தை இயக்கிய ஜே.எஸ்.நந்தினி இந்த வெப்சீரியலை இயக்கவுள்ளார். அடுத்த தலைமுறை இளைஞர்களின் டிரெண்டான வெப்சீரியலில் சுனைனா நடிக்கவிருப்பதை அடுத்து இன்னும் பல பிரபல நடிகர், நடிகைகளும் வெப்சீரியலுக்கு மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments