சமூக வலைத்தளங்களில் பரவி வரும் திருமண வதந்தி.. ஒரே ஒரு புகைப்படத்தில் முற்றுப்புள்ளி வைத்த சுனைனா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சுனைனா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படத்தை வைத்து அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகைகளின் ஒருவரான சுனைனா 'காதலில் விழுந்தேன்’, ’மாசிலாமணி’ ’வம்சம்’ ’திருத்தணி’ ’நீர்ப்பறவை’ ’தெறி’ ‘கவலை வேண்டாம்’ ’தொண்டன்’ ’காளி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் அவருடைய கையும் இன்னொரு ஆணின் கையும் இணைந்து இருப்பது போன்று இருந்ததை அடுத்து லாக் என்ற எமோஜியையும் பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து அவர் ஒரு ஆணிடம் லாக் ஆகிவிட்டதாகவும் விரைவில் அவர் திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சற்றுமுன் சுனைனா தனது சமூக வலைதளத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தை பதிவு செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ’கடந்த சில நாட்களாக என்னுடைய சமீபத்திய போஸ்ட் வைத்து சில செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதை உறுதி செய்யும் மதமாக எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி என்றும் சுனைனா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் தனது வருங்கால கணவர் யார் என்பதை இன்னும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hi, I’ve seen some articles going around regarding my last post and wanted to clarify that I am indeed happily engaged.
— Sunainaa (@TheSunainaa) June 7, 2024
Thank you for all the wonderful messages that are coming in, it means so much ❤️ pic.twitter.com/CdVGVjKJyk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com