சமூக வலைத்தளங்களில் பரவி வரும் திருமண வதந்தி.. ஒரே ஒரு புகைப்படத்தில் முற்றுப்புள்ளி வைத்த சுனைனா..!

  • IndiaGlitz, [Friday,June 07 2024]

நடிகை சுனைனா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படத்தை வைத்து அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகைகளின் ஒருவரான சுனைனா 'காதலில் விழுந்தேன்’, ’மாசிலாமணி’ ’வம்சம்’ ’திருத்தணி’ ’நீர்ப்பறவை’ ’தெறி’ ‘கவலை வேண்டாம்’ ’தொண்டன்’ ’காளி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் அவருடைய கையும் இன்னொரு ஆணின் கையும் இணைந்து இருப்பது போன்று இருந்ததை அடுத்து லாக் என்ற எமோஜியையும் பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து அவர் ஒரு ஆணிடம் லாக் ஆகிவிட்டதாகவும் விரைவில் அவர் திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சற்றுமுன் சுனைனா தனது சமூக வலைதளத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தை பதிவு செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ’கடந்த சில நாட்களாக என்னுடைய சமீபத்திய போஸ்ட் வைத்து சில செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதை உறுதி செய்யும் மதமாக எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி என்றும் சுனைனா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் தனது வருங்கால கணவர் யார் என்பதை இன்னும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கணவன் மனைவி ஒற்றுமை: வராகி அம்மன் வழிபாடு, மாந்திரீகம் பற்றிய ஸ்ரீ வராகி சித்தரின் கருத்துக்கள்!

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், ஸ்ரீ வராகி சித்தர் வராகி அம்மன் வழிபாடு, எதிரிகளை துவம்சம் செய்யும் வழிமுறைகள், மற்றும் பல ஆன்மீக ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு 4 பிரபலங்களின் படங்கள் ரிலீஸா? பின்வாங்குவது எத்தனை?

இந்த ஆண்டு தீபாவளிக்கு நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டாலும் தீபாவளிக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் எத்தனை படங்கள் பின்வாங்குகின்றன?

சிம்புவின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? 'எஸ்.டி.ஆர் 48' என்ன ஆச்சு?

சிம்பு தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் தேசிங்கு பெரியசாமி

நிவேதா பெத்துராஜ் டிராமா போட்ட 'பருவு' வெப் தொடர்.. டிரைலரே பயங்கரமா இருக்குதே..!

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை நிவேதா பெத்துராஜ் காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்வது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலான நிலையில்

தேர்தலில் தோல்வி அடைந்த சில நாட்களில் கனிமொழியை சந்தித்த நடிகை ராதிகா. .என்ன காரணம்?

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ராதிகா தோல்வி அடைந்த நிலையில் தற்போது அவர் திமுக எம்பி கனிமொழியை அவரது இல்லத்தில் சந்தித்த புகைப்படம்