ஜீவா படத்தில் இணையும் 'தெறி' நடிகை

  • IndiaGlitz, [Saturday,January 16 2016]
விஜய்யின் 'தெறி' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை சுனைனா. இவர் தற்போது ஜீவா, பாபிசிம்ஹா, காஜல் அகர்வால் நடிக்கவுள்ள 'கவலை வேண்டாம்' படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் தனக்கு சிறிய வேடமாக இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவமாக வரும் வேடம் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சுனைனா தெரிவித்துள்ளார்.

'யாமிருக்க பயமே' படத்தினை இயக்கிய டீகே இந்த படத்தை இயக்கி வருகிறார். ஆர்.எஸ்.என்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ட்ரெட் குமார் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது.
எஸ்.என்.பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த படத்திர்கு முகேஷ் ஒளிப்பதிவும், கெவின் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

'ரஜினிமுருகன்' திரைவிமர்சனம்

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக பிரச்சனைகளை சந்தித்து வெளிவந்த படம் இதுதான். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற படத்தை கமர்ஷியலாக கொடுத்த இயக்குனர் பொன்ராம், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்கிய படம்தான் 'ரஜினிமுருகன்' இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்....

'தாரை தப்பட்டை' திரைவிமர்சனம்

சேது, நந்தா, பிதாமகன், பரதேசி என பார்வையாளர்களை மிரட்டும் அளவுக்கு படமெடுத்து தேசியவிருதும் பெற்றவர் இயக்குனர் பாலா...

'தெறி' படம் குறித்து அட்லி வெளியிட்ட புதிய தகவல்கள்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அட்லி ஒரு பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில்...

விஜய்சேதுபதியின் 'சேதுபதி' ஆடியோ ரிலீஸ் தேதி

விஜய்சேதுபதி நடித்த 'நானும் ரெளடிதான்' படம் சூப்பர் ஹிட் ஆகியதால் இந்த ஒரே வெற்றியின் மூலம் அவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது....

எஸ்.எஸ்.ராஜமவுலியுடன் இணைந்த சித்தார்த்

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சித்தார்த், தற்போது 'ஜில் ஜங் ஜக்' என்ற படத்தில் நடித்து வருகிறார்....