close
Choose your channels

டிஆர்பியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் சன் டிவி தொடர்கள்.. தப்பித்தது 'சிறகடிக்க ஆசை' மட்டுமே..!

Thursday, November 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவி, விஜய் டிவி, ஜீடிவி ஆகிய தொலைக்காட்சிகளில் தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை டிஆர்பி பட்டியல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும்.

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சன் டிவி தொடர்கள் தான் முதல் 10 இடங்களில் அதிக இடத்தை பிடித்து வரும் நிலையில் இந்த வாரத்துக்கான டிஆர்பி பட்டியலை பார்ப்போம்.

வழக்கம் போல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கயல்’ சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ள நிலையில் சன் டிவியின் ’மூன்று முடிச்சு’ இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த வாரம் ஐந்தாவது இடத்திலிருந்து ’மருமகள்’ சீரியல் இந்த வாரம் மூன்றாவது இடத்தைப் பிடித்து உள்ள நிலையில் கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த ’சிங்க பெண்ணே’ சீரியல் இந்த வாரம் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

’சுந்தரி’ சீரியல் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் ’இராமாயணம்’ தொடர் கடந்த வாரம் போலவே இந்த வாரமும் ஆறாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் 8வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் ’சிறகடிக்க ஆசை’ இந்த வாரம் 7வது இடத்தை பிடித்துள்ள நிலையில் 8வது இடத்தில் சன் டிவியின் ’ரஞ்சனி’ சீரியல் உள்ளது. 9வது இடத்தில் ஜீ டிவியின் ’கார்த்திகை தீபம்’ உள்ள நிலையில் கடந்த வாரம் முதல் 10 இடங்களில் இல்லாத’ பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் இந்த வாரம் 10வது இடத்தை பிடித்து ’சந்தியா ராகம்’ சீரியலை பின்னுக்கு தள்ளியுள்ளது.

முதல் 10 இடங்களில் சன் டிவியின் ஆறு சீரியல்கள், விஜய் டிவி மற்றும் ஜிடிவி யின் இரண்டு சீரியல்கள் இடம் பெற்றுள்ள நிலையில், அடுத்த வாரம் மாற்றம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment