'டாப் குக்கு டூப் குக்கு' டைட்டில் வின்னர் யார்? 2ஆம் இடம், 3ஆம் இடம் யாருக்கு?

  • IndiaGlitz, [Sunday,September 29 2024]

சன் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பான ’டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி இன்று முடிவடைந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்தவர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன் டிவியில் ’டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி கடந்த மே மாதம் தொடங்கி இன்று முடிவடைந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நரேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் சீசனில் இருவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளது பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சீசனின் இரண்டாவது இடத்தை பெப்சி விஜயன் மற்றும் மூன்றாவது இடத்தை நடிகை கயல் சைத்ரா பெற்றுள்ளனர்.

ஆரம்ப முதலிலேயே கலகலப்பாக நடந்த ’டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் பெப்சி விஜயன், சாய் தீனா, சோனியா அகர்வால், சுஜாதா சிவக்குமார், சிங்கம் புலி, ஐஸ்வர்யா தத்தா, ஷாலினி நிவாஸ், நரேந்திர பிரசாத், சைத்ரா ரெட்டி, சுபாஷ் குக்குகளாகவும், கலந்து கொண்டனர், மேலும் டூப்களாக ஜீவா, அதிர்ச்சி அருண், பாரத், தீனா, மோனிஷா, ஜிபி முத்து, விஜய் முகுந்த், சௌந்தர்யா, கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் நடுவராக வெங்கடேஷ் பட் இருந்த நிலையில், அவர் ஜாலியாக இந்த நிகழ்ச்சியை நடத்தினார். இதனால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான நரேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா இருவருக்கும் 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

More News

அனுஷ்கா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. உறுதி செய்த இயக்குனர்..!

அனுஷ்கா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக அந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளதை அடுத்து, அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நல்லவேளை கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை.. 2 படங்களை மிஸ் செய்த தகவல் கூறிய அரவிந்த்சாமி..!

சூப்பர் ஸ்டார்ஜ் ரஜினிகாந்த் அவர்களுடன் 'தளபதி' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அரவிந்த்சாமி, உலகநாயகன் கமல்ஹாசனுடன் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும்,

சிங்கப்பூர் குடிமகன், பைலட்டை திருமணம் செய்ய போகும் 'வாணி ராணி' சீரியல் நடிகை..!

ராதிகா நடித்த 'வாணி ராணி' உள்பட சில சீரியல்களில் நடித்த நடிகை, சிங்கப்பூர் குடிமகன் பைலட்டை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை முதலமைச்சர் ஆனார் உதயநிதி.. கமல்ஹாசன் உள்பட திரையுலகினர் வாழ்த்து..!

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் பொறுப்பேற்று கொண்ட நிலையில், அவருக்கு கமல்ஹாசன் உள்பட திரை உலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

'கில்லி' ரீரிலீஸ் வசூல் சாதனையை முறியடித்த படம்.. குவியும் கோடிகள்..!

விஜய், திரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆன நிலையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் ரீரிலீசின் மூலம் 26 கோடி ரூபாய் வசூல் செய்ததாக செய்திகள்