close
Choose your channels

தியேட்டரில் இல்லை, ஓடிடியிலும் இல்லை: நேரடியாக சன் டிவியில் ரிலீஸ் ஆகும் சுந்தர் சி படம்!

Thursday, September 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுந்தர் சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் அவரது உதவியாளராக இருந்தவரும் ‘வீராப்பு', 'தம்பிக்கு எந்த ஊரு' மற்றும் ‘தில்லுமுல்லு' ஆகிய படங்களை இயக்கிவருமான பத்ரி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளது என்பதும், இந்த படம் கன்னடத்தில் சூப்பர்ஹிட்டான ‘மாயாபஜார் 2016’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படம் தான் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் இல்லை என்றும், ஓடிடியிலும் ரிலீஸ் இல்லை என்றும், வரும் தீபாவளி அன்று இந்த படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகிய ‘மலர்கள்’, ‘ஆடுகிறேன் கண்ணன்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களை இயக்கியவர் பத்ரி என்பதால் அவருக்கும் சன் டிவிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசன்னா, ஷாம், அசோக் செல்வன் ஆகிய மூன்று ஹீரோக்கள் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். ஸ்ருதி என்பவர் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment