இந்த வார டிஆர்பி ரேட்டிங்.. முதல் 6 இடங்களில் சன் டிவி சீரியல்கள் தான்..!

  • IndiaGlitz, [Thursday,October 24 2024]

தமிழ் தொலைக்காட்சிகளை பொருத்தவரை சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகியவற்றில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே தான் கடும் போட்டி டிஆர்பியில் நிலவி வருகிறது என்பதை கடந்த சில வாரங்களாக பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல்கள் வரும் நிலையில், இந்த வாரமும் முதல் ஆறு இடங்களை சன் டிவி தான் பிடித்து முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியின் சீரியல் ஆன ’கயல்’ வழக்கம் போல் இந்த வாரமும் முதல் இடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ’மூன்று முடிச்சு’ சீரியல், மூன்றாவது இடத்தில் ’சிங்கப்பெண்ணே’, நான்காவது இடத்தில் ’மருமகள்’, ஐந்தாவது இடத்தில் ’சுந்தரி’ மற்றும் ஆறாவது இடத்தில் ’ராமாயணம்’ உள்ளது. முதல் ஆறு இடங்களில் சன் டிவி தான் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல் இடத்தில் இருந்த ’சிறகடிக்க ஆசை’ சமீபகாலமாக பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இந்த வாரமும் கடந்த வாரம் போலவே 7வது இடத்தை பிடித்துள்ளது. 8வது இடத்தில் மீண்டும் சன் டிவியின் ’மல்லி’ தொடர், 9வது இடத்தில் விஜய் டிவியின் ’பாண்டியன் ஸ்டோர்ஸ், 2’ மற்றும் 10வது இடத்தில் விஜய் டிவியின் ’சின்ன மருமகள்’ ஆகியவை இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

புஷ்பா 2 ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்.. இன்னொரு ஆச்சரியமான தகவல்..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும்,

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், டாப் 4 இல் இடம் பிடித்த போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படம்

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில்,

மாறி மாறி பதிலடி கொடுத்த சவுண்ட் சௌந்தர்யா.. முத்துக்குமரன், சுனிதா கப்சிப்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாள் எபிசோடையும் அன்றைய தினம் வரும் ப்ரோமோ வீடியோக்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சற்று முன் வெளியான இன்னொரு ப்ரோமோ வீடியோவில் சௌந்தர்யா

'சிறகடிக்க ஆசை' முத்து, மீனாவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியல் ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்களின் சம்பள குறித்த தகவல் கசிந்துள்ளது.

காமராஜர், பெரியார், அம்பேத்கருக்கு மட்டுமல்ல.. தவெக மாநாட்டில் இன்னும் சில கட்-அவுட்டுக்கள்..!

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநாட்டிற்கான பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.