close
Choose your channels

தமிழ் சீரியல்களின் டிஆர்பி.. முதல் 10 இடங்களில் 7 சன் டிவி சீரியல்கள்..!

Friday, August 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சன் டிவி தான் கடந்த பல ஆண்டுகளாக முன்னணி இடத்தில் உள்ளது. விஜய் டிவி மற்றும் ஜீ டிவி சீரியல்கள் சிறப்பாக கொண்டு வந்து கொண்டிருந்தாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடங்களில் 7 சன் டிவி சீரியல்கள் உள்ளன என்பதும் முதல் 6 இடங்களில் சன் டிவி சீரியல்கள் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில் அதில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கயல்’ என்ற சீரியல் முதல் இடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ’எதிர்நீச்சல்’ மூன்றாவது இடத்தில் ’சுந்தரி’ நான்காவது இடத்தில் ’வானத்தைப்போல’ ஐந்தாவது இடத்தில் ’இனியா’ மற்றும் ஆறாவது இடத்தில் ’மிஸ்டர் மனைவி’ ஆகிய சன் டிவி சீரியல்கள் தான் உள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாக்கியலட்சுமி’ 7வது இடத்தில், சன் டிவியின் ’ஆனந்த ராகம்’ 8வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் சென்று கொண்டிருக்கும் விஜய் டிவியின் ’சிறகடிக்க ஆசை’ இந்த வாரம் 9வது இடத்தை பிடித்துள்ளது. 10வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment