close
Choose your channels

இந்த வாரத்துடன் முடிவடையும் சீரியல்.. ஆரம்பமாகும் 'ஈரமான ரோஜாவே' நாயகியின் புதிய தொடர்..!

Tuesday, August 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’வானத்தைப்போல’ என்ற சீரியல் இந்த வாரம் முடிவடைய இருக்கும் நிலையில் அதற்கு பதிலாக ’ஈரமான ரோஜாவே’ சீரியலில் நடித்த நாயகி நடிக்கும் புதிய தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து சென்று கொண்டிருந்த ‘வானத்தை போல’ என்ற சீரியல் இந்த வாரம் முடிவடைய இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த சீரியலுக்கு பதிலாக ’ஈரமான ரோஜாவே’ தொடர் நாயகி சுவாதியின் புதிய சீரியல் சன் டிவீயில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

’ஈரமான ரோஜாவே 2’ சீரியலில், நடிகை சுவாதி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இந்த சீரியலுக்கு என ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. ஆனால் இந்த சீரியல் முடிவடைந்த நிலையில் இதுவரை வேறு சீரியலில் கமிட்டாகாமல் இருந்த சுவாதி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ’மூன்று முடிச்சு’ தொடரில் நாயகியாக நடிக்கிறார்.

இந்த தொடரில் சுவாதிக்கு ஜோடியாக நடிகர் நியாஸ் நடிக்க இருப்பதாகவும் இவர் ஏற்கனவே ’புதுப்புது அர்த்தங்கள்’ ’மந்திரப்புன்னகை’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் என்று குறிப்பிடத்தக்கது. ’வானத்தைப்போல’ தொடர் இந்த வாரம் முடிவடைவதால் இந்த தொடர் ஒளிபரப்பான அதே இரவு 8:30 மணிக்கு சன் டிவியில் ’மூன்று முடிச்சு’ தொடர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment