பிறந்த நாளில் காதலரை அறிமுகம் செய்த சன் டிவி சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர் தனது பிறந்த நாளில் காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்களின் வாழ்ந்து குவிந்து வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல் என்பதும் இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது என்பதும் தெரிந்ததே. 300 எபிசோடுகளை கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி , ஹரிப்ரியா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சீரியலில் வாசு என்ற கேரக்டரில் நடிகை வைஷ்ணவி நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியலில் இவர் தைரியமான பெண்ணாகவும், கருத்துக்களை சுதந்திரமாக பேசும் பெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைஷ்ணவி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாளின் போது அவர் தன்னுடைய காதலரை அறிமுகம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
இந்த பதிவில் ’நீங்கள் மிகவும் விரும்பும் நபருடன் உங்கள் பிறந்த நாளை கொண்டாடுவதை விட வேறு என்ன சிறப்பு இருக்க முடியும்? என்று கூறியிருந்த வைஷ்ணவி ‘இந்த பிறந்தநாளின் போது எனது மனதை கவர்ந்தவர் என்னுடன் அன்பை பகிர்ந்து கொண்டார், அவருடைய அன்பையும் அர்ப்பணிப்பையும் ஒரு அழகான நினைவூட்டலாக உள்ளது என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments